tamilnadu

img

இந்திய “ஏ” அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ரமேஷ் பவார்

5  ஒரு நாள், 2 டெஸ்ட் (அதிகாரப்பூர்வமற்ற) போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க தென் ஆப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  வரும் 29-ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான இந்திய அணியின்  பந்துவீச்சு பயிற்சியாளராக ரமேஷ் பவார் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக இரு டெஸ்டுகள், 31 ஒருநாள் ஆட்டங்களில் விளை யாடியுள்ள ரமேஷ் பவார் 2018-ல் இந்திய மகளிர் அணியின் பயிற்சி யாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.